நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இதனால்,அங்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள்,என அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதனிடையே,உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு சென்ற இந்திய மாணவர்கள் ஆபரசேன் கங்கா திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனின் கீவ் நகரில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்ட இந்திய தூதரகத்துக்கும், தன்னை மீட்க உதவிய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்த எனக்கு இங்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்த கீவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,மேலும் என்னை ஆதரித்த இந்தியப் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.இந்திய தூதரகத்தால் நான் பாதுகாப்பாக வீடு திரும்புவேன்”,என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்ட அவர் மேலும் மேற்கு உக்ரைனுக்கு செல்லும் வழியில் உள்ளதாகவும், அவர் விரைவில் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டவர் இந்தியாவால் மீட்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக,பங்களாதேஷ் மாணவரை மீட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.மேலும்,ஒரு நேபாள மாணவரை ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…