ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆய்வு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை ஆய்வு செய்தார் இம்ரான் கான் .பிரதமருடன் உடன் பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரலும் உடன் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு காஷ்மீர் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இம்ரான் கானின் இந்த செயல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…