BREAKING :பாக்.முன்னாள் அதிபர் முஷரப்-க்கு தூக்கு தண்டனை.!
- தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்.
- பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார்.
முஷரப் பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். அப்போது 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார்.இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.
இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. முஷரப் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பர்வேஷ் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு உடல்நிலை மோசமடைந்ததால் அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின.
இந்நிலையில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகார் அகமது சேத் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த முஷரப்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது.