முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்றார்.பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார்.இந்த நெருக்கடி நிலை டிசம்பர் 15-ம் தேதி வரை அமலில் இருந்தது.
இதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் அதிபராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்றதும் தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதாகவும் , நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்கும் முஷரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
உடல் நிலை குறைவால் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்றார். சிகிக்சைக்காக துபாய் சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. ஒரு புது விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள முஷரப் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முஷரப் மீதான தேச துரோக வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷரப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.இந்த மனு மீது விசாரித்த 3 பேர் கொண்ட அமர்வு முஷரப்பிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைத்தது ‘அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என ஒருமனதாக கூறி நீதிபதிகள் முஷரப்புக்கு விதித்த மரண தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…