“பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கிறது” – பாகிஸ்தான் பிரதமர்..!
பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதற்கு, சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,எச்.பி.ஓ (HBO) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,”ஒரு பெண் மிகக் குறைவான அளவில்,உடலை காட்டும் வகையில் ஆடைகளை அணிந்தால்,அவர்கள் ரோபோக்களாக இல்லாமல் இருந்தால்,அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி,ஆண்களின் உணர்வுகளை தூண்டும்”,என்று கூறினார்.
இது எதிர்க்கட்சித் தலைவர்களிடையேயும், ஏராளமான நெட்டிசன்களிடையேயும் கடும் சீற்றத்தைத் தூண்டியது.
மேலும்,பிரதமர் இம்ரான் பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பரப்பி,”பிரதமர் இம்ரான் கான் பாலியல் வன்முறைகளை ஆதரிப்பவர் என்றும்,பெண்களுக்கு எதிரானவர்”, என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Imran Khan is r*pe apologist and hates women. pic.twitter.com/lx0SoHTeWU
— Anaya Khan (@AnayaNKhan) June 21, 2021
முன்னதாக,கடந்த ஏப்ரல் மாதம்,தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான்,”பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு,பெண்கள் உடலை முழுமையாக மூடாமல் அரைகுறையாக ஆடை அணிவதே காரணம்”, எனக் கூறினார்.
அதற்கு,இஸ்லாமாபாத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு,பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது