போட்டிக்கு முன்னாடி இப்படி சாப்பிட்ட எப்படி விளையாட முடியும்!பாகிஸ்தான் ரசிகர்கள்!
உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணி மோதியது.
அப்போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதன் மூலம் 7 வது முறையாகவும் பாகிஸ்தான் அணி தோற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தோற்றத்திற்காக பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் போட்டிருக்கு முந்தைய நாள் இரவு உணவு உட்கொள்ளும் புகைப்படங்களும், வீடியோக்களும் பகிர்ந்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் போட்டிக்கு முதல் நாள் இப்படி சாப்பிட்டால் எப்படி விளையாட முடியும் என கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கருத்து ஒன்றை பதிவு செய்தார்.அதில் இந்த ஹோட்டலில் சாப்பிடும் வீடியோ போட்டிக்கு முதல் நாள் எடுத்தது இல்லை ஜூன் 13-ஆம் தேதி எடுக்கப்பட்டது என கூறினார். மேலும் ரசிகர்கள் எங்களையும் குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக பேசுவது சரியானது இல்லை என தெரிவித்தார்.
மேலும் சோயிப் மாலிக் மனைவியும், டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கூறுகையில் “எங்கள் அனுமதி இல்லாமல் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் தோற்றால் கூட ஹோட்டலில் அனுமதிப்பார்கள்” என தெரிவித்தார்.