ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் இவர் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்திய தேன் விசாரணை முடிவில் இன்று ஹபீஸ் சையது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது
2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக புகுந்து, துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த, இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் மூலகாரணமாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஆவார்.
இதனையடுத்து, அமெரிக்கா, மும்பை தாக்குதலை தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது. இந்நிலையில், இவரை நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப் பற்றிய தகவல்களை அளிப்பதற்கு, 10 மில்லியன் பவுண்ட் பரிசு அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ஆகும்.
இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் நிலையில், சர்வதேச அளவில் தொடர்ந்து நெருக்கடிகள் வந்ததை தொடர்ந்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஸ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத் தவா பலாக் இன்சனியட் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத தடுப்புப் படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி பயங்கரவாத தடுப்புப் படையினர், பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களில் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, ஜூலை 17-ம் தேதி, லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சயீத் சென்று கொண்டிருந்த போது, பயங்கரவாத தடுப்பு படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில், ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.