இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது!

- இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர்.
- உடனடியாக கண்டறிந்து கைதுசெய்த எல்லை பாதுகாப்பு படையினர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான் நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுத்ததுடன் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், ஜம்மு காஷ்மீரில் ஏதேனும் தாக்குதல் நடத்துவதற்காக வந்து இருந்தாரா? இவர் வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த பல்வேறு கோணங்களில் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025