PakistanDecides2018:பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 272 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
8,396 வேட்பாளர்கள் 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு களத்தில் உள்ளனர்.இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.