18 வயது தேவையில்லை..பூப்பெய்தலே திருமணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மக்கள் அதிர்ச்சி
பெண்கள் பூப்பெய்திவிட்டால் அவர்கள் திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 14 வயது ஹுமா என்ற சிறுமி கடத்தப்பட்டார். சிறுமியைஅப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி உள்ளார். கடத்தப்பட்ட சிறுமியை கிறிஸ்தவ மத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண் டுள்ளார் அந்த இளைஞர், டார். இது தொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமி ஹுமாவுக்கு திருமண வயதான 18 வயது ஆகவில்லை என்றாலும் அவர் பூப்பெய்திவிட்டதால் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இந்த திருமணம் ஆனது செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெற்றோர்க்கு அதிர்ச்சியை தந்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
ஒரு நபரால் சிறுமி கடத்திப்பட்டு கட்டாய மதமாற்றம் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.இப்படிபட்ட திருமணத்தை உயர்நீதிமன்றமே அங்கீகரித்த சம்பவம், பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.