டாஸ் வென்ற பாகிஸ்தான் ! முதலில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ),ஷான் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி,நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பாராஸ் அஹ்மத்(கேப்டன் ), சோயிப் மாலிக், ஆசிப் அலி, வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர் ஆகியோர் இடம் பெற்றனர்.