அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – பாகிஸ்தான் பிரதமர்!
அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியடைந்த தெற்கு ஆசியா எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் பங்கேற்று உள்ளார். அதில் பேசிய பிரதமர், பனிப்போர் நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடுகள் குழுக்களாக உருவாவதை தடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த குழுக்களுடன் நாம் இணைய கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருவதாகவும், இந்த விருதினை விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.