இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – பிரதமரின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் பதில்..!
இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என பிரதமர மோடியின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய ஷபாஸ் ஷெரீப் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதியை இந்தியா விரும்புகிறது எனவும், இதன் மூலம் மக்களின் நல்வாழ்வையும், செழிப்பை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள ஷபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான கூட்டுறவை பாகிஸ்தான் விரும்புகிறது எனவும், ஜம்மு காஷ்மீர் போன்ற நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது இன்றியமையாதது. மேலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் அனைவரும் அறிந்தது தான், அமைதியை காப்போம்.. என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Thank you Premier Narendra Modi for felicitations. Pakistan desires peaceful & cooperative ties with India. Peaceful settlement of outstanding disputes including Jammu & Kashmir is indispensable. Pakistan’s sacrifices in fighting terrorism are well-known. Let’s secure peace and.. https://t.co/0M1wxhhvjV
— Shehbaz Sharif (@CMShehbaz) April 12, 2022