நள்ளிரவில் வாக்கெடுப்பு;கவிழ்ந்த இம்ரான் கான் அரசு -பாக்.புதிய பிரதமர் இவரா?..!

Default Image

பாகிஸ்தான்:எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

பிரதமர் வரவில்லை:

இதனையடுத்து,இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால்,இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கள் கூட  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

imran khan
imran khan

இதனால், சபாநாயகர்  நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்துவைத்தார். அதன்பின்னர்,நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல் வெளியாகியது.

நள்ளிரவில் வாக்கெடுப்பு – கவிழ்ந்த அரசு:

இந்நிலையில்,நள்ளிரவு 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 174 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

வாக்கெடுப்பில் தோல்வி:

இதனையடுத்து,வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கானை நீக்கி பாக்.நாடாளுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தானின் எதிர்க்கட்சி (முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி) தலைவரான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புதிய பிரதமர் தேர்வு செய்வதற்காக பாக்.நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.

Shahbaz Sharif

பாகிஸ்தானில் எந்த பிரதமரும் தங்களது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்