ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பதற்றம் ஓய்ந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது.
இந்த நிலையில் தான் சிறையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…