தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14- ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்ப்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில், தற்போது 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயன்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) “குற்றப்பத்திரிகை” என்று அழைக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சிக்கவைக்க இந்தியா இதைச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் எதிர்ப்பு கருத்துக்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக புல்வாமா தாக்குதல் நடத்தியதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் அதன் குறுகிய உள்நாட்டு அரசியல் நலன்களை மேலும் மேம்படுத் துவதற்காக குற்றப்பத்திரிகை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் தவறான செயலை பாகிஸ்தான் விமானப்படை திறம்பட எதிர்கொண்டது. இதன் விளைவாக இரண்டு இந்திய போர் விமானங்கள் வீழ்ச்சியடைந்தது.
அதில், இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின்னர், இந்திய விமானி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…