607 பேருக்கு எச்.ஐ.வி! அதில் பெரும்பாலானோர் குழந்தைகள்! பதறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் தெற்கு பகுதியில் உள்ள சில குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்ததில் ரத்தத்தில் அவர்கள் அனைவரும் எச் ஐ வி வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் பாகிஸ்தானில் ஒரு சிறு பகுதியில் உள்ள 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பரவியிருந்தது கண்டறியப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள பலரும் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்தத்தை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இவர்களில் 607 பேருக்கு எச்ஐவி இருப்பதை கண்டறிந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது வருந்தத்தக்க விஷயம் ஆகும்.
ஆனால் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்ஐவி இல்லாத போது அந்த குழந்தைகளுக்கு மட்டும் எப்படி எச்.ஐ.வி வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
DINASUVADU