சுதந்திரம் இல்லை உங்கள் நாட்டில் அடுக்கும் ஐநா..!என்ன சுதந்திரம் இல்லை நிமிர்த்தும் பாகிஸ்தான்
- பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
- இம்ரான் கான் ஆட்சியில் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐநா குற்றம் சாட்டி உள்ளது.
பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்கின்ற தலைப்பில் 47 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கையை ஐ.நா தயாரித்துள்ளது.அதில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. குறிப்பாக அந்த மதங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் ஆண்டுத்தோறும் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், சிறுமிகளும் கடத்தப்பட்டு மதமாற்றப்பட்டு முஸ்லீம் ஆடவர்க்கு கட்டாய திருமணமும் செய்யப்படுவதாகவும் தனது அறிக்கையில் ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த குற்றங்கள் எல்லாம் தற்போது பிரமதராக உள்ள இம்ரான் கான் ஆட்சியில் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.