பயணிகள் கவனித்திற்கு!30% போலி பைலட்..!அம்பலமான.,விமான ரகசியம்
அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் போலி பைலட் உரிமங்களை வைத்து இருப்பதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ள செய்தி அந்நாட்டு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் அந்நாட்டு பார்லிமெண்டில் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது:
இது குறித்து அவர் கூறியதாவது:’நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டதாகவும். கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு பறக்கும் அனுபவமே இல்லை. போலி உரிமத்தை வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் தற்போதும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானில் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக அம்பலமாகியுள்ளது.மேலும் இந்த கோர விபத்து நடப்பதற்கு முன் கன்ட்ரோல் ரூமிலிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.வந்த எச்சரிக்கையை கவனிக்காமல் பைலட்கள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து உரையாடி கொண்டு இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் கொரோனோ உரையாடே அவர்களின் இறுதி உரையாடலாக அமைந்தது. காரணம் விமானம் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.மேலும் வெளியாகிய இத்தகவலால் பயணிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.