பாகிஸ்தானின் கடுமையான முயற்சியால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைக் குழு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை திரும்ப ஒப்படைத்து உள்ளதாக தகவல் மேலும் இதன் மூலம் அவர் தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது என்று அறியப்படும் ஜமா-அத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயீது (70) உலா வந்தவர்.இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் மூளையாகவும் தொடர் பயங்கரவாதத்தில் தொடர்புடையவனாகவும் உள்ள இவனை இந்தியா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
ஐ.நாவும் இவரை பயங்கரவாதி என்று தான் கூறியுள்ளது. மேலும் அமெரிக்கா ஹபீஸின் தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் அறிவித்து உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் தண்டனை பெற்று லாகூர் மத்திய சிறையில் ஹபீஸ் உள்ளார். இதனால் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்குகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆனது முடக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் ஹபீஸ் தனது குடும்பத்தினரின் அடிப்படை செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கில் இருந்து பாக்கெட் மணி பெற அனுமதிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் சார்பாக இம்ரான் அரசு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து வலியுறுத்தி வரவே அதனை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்று ஹபீஸ் சயீது, அப்துல் சலாம் பூட்டாவி, ஹாஜி எம் அஷ்ரப், யஹ்யா முஜாஹித் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் தங்கள் வங்கிக் கணக்குகளை மீட்டெடுத்து உள்ளனர். பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடு அதன் போலித்தனத்தை உலகரங்கில் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…