பாகிஸ்தான் : பெட்ரோல் நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து – 4 பேர் பலி!

பாகிஸ்தானிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி எனும் நகரிலிருந்து வடக்கே உள்ள நசீமாபாத் எனும் பகுதியில் இயங்கி வரக்கூடிய பெட்ரோல் நிலையம் ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பில் அங்கு நின்று கொண்டிருந்த 4 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது விபத்து என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025