கொரோனா தொற்றால் பங்காளி நாடான பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு… மேலும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…
நம் அண்டை நாடான சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தெற்காசியவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக நம் அண்டை நாடு பாகிஸ்தான் உள்ளது. ஆனால்,இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு 26 நாட்களுக்கு பிறகுதான் பாகிஸ்தானில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதன் விளைவாக அதிகமாக அங்கு தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அண்டை நாட்டின் அனைத்து எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில், அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 1500-ஐ தாண்டி தற்போது 1597ஆக உள்ளது.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்தான் அதிக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் சிந்து பகுதியில் 469 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது வரை பாகிஸ்தானில் 14 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.