அவசர ஹெல்ப்லைன் அமைக்க பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் உத்தரவு!
அவசர ஹெல்ப்லைன் அமைக்க பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாகாணத்தில் பெற்ற குழந்தைகளுக்கு முன்பதாக பெண்ணொருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த செய்தி பலரது மனதையும் உலுக்கியது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக இரண்டு மாதத்திற்குள் தேசிய ஹெல்ப்லைன் சேவையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கட்டணமின்றி இந்த சேவை இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் தற்போது உள்ள அனைத்து ஹெல்ப்லைன்களும் புதிதாக உருவாக்கப்பட்ட கூடிய தேசிய ஹெல்ப்லைனுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்த விசாரணையில் டிஎன்ஏ சோதனை மூலம் தற்போது குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.