#GalwanVally#பாய்ச்சலை விட பதுங்கலே பலே! ஆதரவு ஆப்.,பங்காளி முடிவு
சீனாவிடம் இருந்து ஒதுங்கி இருந்தால் தான் உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்க வழு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாக்., வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள கால் வைக்கும் முன்பே பல நாடுகள் கடும் எதிர்ப்பு கொடியினை காண்பித்து வருகின்றன.மேலும் உலக முழுவதும் ‘கொரோனா’ வைரஸை பரப்பி விட்டதாக சீனா மீது பல நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
இந்நிலையில் வைரஸ் பாதிப்பு உலகளவில் தீவிரமாக உள்ள நிலையிலும் நாடு பிடிக்கும் சீனாவின் ஆசையும் அத்ன் அத்துமீறிலையும் உலக நாடுகள் உன்னிப்பாக உற்று நோக்கி வருகின்றது.மேலும் இந்தியாவுடன் கல்வான் எல்லைப் பிரச்னையில் சீனா கால் வைத்து இறங்கியுள்ளதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றன.
இந்நிலையில் தான் சீனாவிற்கு இதுவரை பச்சைக்கொடி காட்டி வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குஅந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பறந்துள்ளது வெள்ளைக்கொடி ஆலோசனை.
பாக்.,பிரதமர் இம்ரான் கான் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மேலும் இந்தியா உடனான எல்லை விவகாரத்தில்சீனாவுக்கு பல உலக நாடுகள், கண்டனம் தெரிவித்து வருகிறது.இதன் முன்னோட்டமாக சீனாவை தனிமைப்படுத்த உலக நாடுகள் முயற்சியில் இறங்கி உள்ளது.என்று ஆலோசனைகள் அடுக்கடுக்காக பறந்தது.
சீனாவிற்கு ஆதரவு அளித்து வரும் விவகாரத்தில் பாகிஸ்தான் விமானங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. சீனா உடனான நட்பே இதற்கு முக்கிய காரணமாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நிலைமை குறித்து இம்ரான் கானுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் இதனால், சீனாவுடனான உறவு குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு துறை தெரிவித்தது மட்டுமின்றி சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில், சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும்.
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், சீனாவில் இருந்தே ஆட்களை அழைத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.இது, பலுாசிஸ்தான், கில்ஜித் பலூசிஸ்தான் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சிறுபான்மையினரான உல்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது. இதுவும் மத ரீதியில் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. நாளை பாகிஸ்தானிலும் இதே போல செயல்படும் என்ற அபாயம் உள்ளது.
எனவே சீன உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சீனா உடன் சேர்த்து, நம்மையும் உலக நாடுகள் தனிமைப்படுத்திவிடுவர்கள் என்று இம்ரான் கானுக்கு, வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கி உள்ளது. தற்போது இம்ரான் கான் பச்சை கொடியும் வேண்டாம் ;ஏன் கொடியே வேண்டாம்;என்ற மனநிலையில் இருப்பதாக பங்காளி வட்டாரத் தகவல்கள் பறக்கின்றன.