பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் !
பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பல தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியான மான் ஷெரா என்ற இடத்தில் புதிய இராணுவ விமானதளத்தை பாகிஸ்தான் அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த ராணுவ தளம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 1600 மில்லியன் ரூபாயாம்.
மேலும் இந்த விமானத்தளம் தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விமானத்தளம் உருவாக இருக்கிறதாம்.இந்த விமான தளத்தில் இருந்து ஸ்ரீ நகர் வர வேண்டுமானால் 5 நிமிடத்தில் இருந்து 6 நிமிடங்களில் விமானம் வந்தடையுமாம்.
மேலும் இந்த விமானத்தளம் எல்லைகட்டுப்பாட்டு கோட்டையை சுற்றி 100 கிலோமீட்டர் அருகே அமைக்க படுவதால் இது இந்தியாவிற்கு ஆபத்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது.