கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவ தளபதி.. நாடாளுமன்றத்தில் போட்டு உடைத்த எதிர்க்கட்சி எம்.பி.!
விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால், அன்று இரவு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி குரேஷி, விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்டபோது நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத் தலைவர்களிடம் அபிநந்தனை விடுவிக்கவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என தெரிவித்துள்ளார்.
அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கி, வியர்வை கொட்டியதாக கருத்து தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேசிய அவர், இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற எச்சரிக்கைக்கு பயந்துதான் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக தெரிவித்துள்ளார்.