குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்!

- மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது.
- இதற்க்காக கண்டன தீர்மானத்தை பாகிஸ்தான் அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு கடும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், பாகிஸ்தான் அரசானது தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவு துறை பதிலடி கொடுக்கும் விதமாக கருத்தை பதிவு செய்துள்ளது.
இந்திய வெளியுறவு துறை, ‘ பாகிஸ்தான் அரசனது சிறுபான்மை மக்களிடையே நடத்திவரும் தாக்குதலை சர்வதேச அளவில் மறைக்கவே இந்த கண்டன தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது எனவும், இது பாகிஸ்தான் அரசின் பலவீனமான முயற்சி எனவும், இந்த பொய் பிரச்சாரத்தை உலக நாடுகள் நம்பாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினருக்கு சம உரிமை கொடுங்கள்.’ என இந்திய அரசானது பாகிஸ்தான் அரசுக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025