பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடு !
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில், மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் நிதிமோசடிகளைக் கண்காணிக்கும் பொருளாதார நடவடிக்கைக் குழு இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள துருக்கி, சீனா, வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் ஆகிய உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இறுதியில் சீனாவும், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலும் தங்களது எதிர்ப்பைத் திரும்பப் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அண்டை நாடுகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவுவதைத் தடுப்பதற்காக, அமெரிக்கா தந்த அழுத்தத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்யும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான், தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.