பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதே பாணியில் தக்க பதிலடி !
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதே பாணியில் தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு உரிய விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டி இருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ராம் டாஸ்ட்கிர் (Khurram Dastgir), தவறான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தியா மோசமான தாக்குதலை நடத்தினால், அதே பாணியில் தக்க பதிலடியைக் கொடுக்க தங்களது ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் தவறான அணுகுமுறைகளால் தெற்காசியப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் குர்ராம் டாஸ்ட்கிர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.