கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் ஊழியர்களாகிய பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு மற்றும் முதியவர்களை பராமரித்துக் கொள்வதற்கு சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பின்படி 600 மணி நேர விடுப்பு ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் அவர்களுக்கு மணிக்கு 35 டாலர்களும் வாரத்திற்கு 1500 டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விடுப்பு எடுத்துக் கொண்டாலும் 15 லட்சம் வரையில் சம்பளம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் அரசு ஊழியர்களாக பணியாற்றக்கூடிய அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…