சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் ரைசி மற்றும் அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஈரான் அதிபர் சென்ற இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதற்கட்டமாக தகவல்கள் கிடைத்துள்ளது. […]
சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு […]
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பியும், அதே தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டுள்ளன. தற்போது வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வலை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா மீதும் இதே போல பாலியல் […]
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தம்பதியினர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஃபர்ஹா மற்றும் தப்ரேஸ் ஆகியோர் பயங்கரவாதிகளால் அனந்த்நாக் பகுதியில் தாக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறையினர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் […]
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஓர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீடியோ மூலம் அவர் கூறுகையில், நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு நங்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) வருகிறோம். நீங்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை கைது செய்து கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார். மேலும் , பிரதமர் மோடி, […]
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 […]
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ‘i am waiting’ என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள […]
சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்காகவும் சூப்பரான ஒரு ஆஃபரை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய் தான். 100 ரூபாய் செலுத்தி இந்த சுற்றுலா அட்டையை வாங்கிக்கொண்டு மெட்ரோ […]
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வழிகாட்டுதலின் பெயரின் ஏற்கனவே 2023 மார்ச் மாதம் முதல் ‘ஹெயில்’ எனும் கடலுக்கு அடியிலான அணுஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இனி அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள கூடாது என ஐநா […]
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 13ஆம் தேதி ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால், டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக, மே 16ஆம் தேதி டெல்லி காவல்துறையால் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் நேற்று டெல்லி காவல்துறை முன்பு ஸ்வாதி மாலிவால் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பிறகு, தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் […]
சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் 100 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருநாள் ஊதியம் மாநிலம் சார்ந்து வேறுபடும். இந்த 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதம், மத்திய ஊரக வளர்ச்சி துறை 100 […]
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், டிவைடரில் மோதிய நிலையில், கார் மீது எதிர்ப்புறம் வந்த லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அனந்தபூரில் உள்ள ராணி நகரை சேந்த ஷேக் பாஷா என்பவர் தனது திருமணத்திற்காக ஹைதராபாத் சென்று துணிகள் வாங்கிவிட்டு திரும்பும் போது […]
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர். நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கும் தகவலை காவல்துறையினருக்கு சிலர் தெரிவித்த நிலையில், மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் குழு ஒன்றை […]
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (வியாழன்) வழக்கு பதியப்பட்டது. ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று மாஜிஸ்ரேட் முன் […]
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்து, உத்தரப் பிரதேசம், […]
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில் 4 கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் தேர்தல்கள் நிறைவுபெற்றதை அடுத்து, தற்போது வடமாநிலங்களில் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நிறைவு பெற்றாலும், மாற்றுக்கட்சிகளின் மீதான விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் முன்வைக்க தவறுவதில்லை. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் செய்லபடுத்தப்பட்டு வரும் இலவச […]
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்தும் இருக்கிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாகதடை விதித்துள்ளது. ஏற்கனவே, […]
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற அந்த சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 64 பேர் பயணித்துள்ளனர். தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சுமார் 20 பேர் […]
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. பின்னர் அந்த மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. அதில் அரசுக்கு சுமார் 2,800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பாட்டு […]