சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலாவை சாப்பிட்ட 12 வயது சிறுமியின் வயிற்றுக்குள் ஓட்டை ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரின் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது, கடந்த மாதம், திருமண விழா ஒன்றில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்டதால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு […]
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை […]
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக […]
சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா […]
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு […]
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (மே 20) நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் , பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிசா , மேற்கு வங்கம் என மொத்தமாக ஆகிய மாநிலங்களில் தொகுதிகளில் தற்போது இந்த தேர்தலானது நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தமாக 543 தொகுதிகளில் இதுவரை 379 […]
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட […]
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் கடத்தப்பட்டதாகவும், இவர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டன. டெல்லியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன் போதை பொருள் […]
சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் டெண்டு இலைகளை பறித்துவிட்டு வீடு திரும்பிய போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.. இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் அருண் […]
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் புகைப்படங்களையும் ATS காவல் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணையை ATS காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை: சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மரண தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குற்றவாளியான அமீர்ல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இன்று (மே 20) உறுதி செய்தது. கடந்த 2016 ஆண்டு […]
சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அதைப்போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது. காயமடைந்த வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் […]
சென்னை: கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும் முன்பை விட தற்போது தீவிரமடைந்து உள்ளது. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனங்கள் குறித்தும் பேசுவது போல , தனியார் ஊடகங்களிலும் பேட்டிகள் வாயிலாக தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. தனியார் செய்தி நிறுவனமான […]
சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டனர் என அறிவிக்கப்பட்டது. ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நடைபெற்ற […]
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், குறிப்பிட்ட பத்திரிகை தினமும் எங்களை விமர்சிக்கும் வகையில் செய்திகளை பதிவிடுகிறது. அதிமுகவில் , புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு நாங்கள் […]
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உடல் மீட்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று வருகை தந்தனர். வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் […]
சென்னை: சாவர்க்கரின் 5 பெருமைகள் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், மும்பை சென்று அங்கு அண்ணல் அம்பேத்கார் நினைவிடம், சாவர்க்கர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கினர். அதில், சாவர்க்கர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு அவர் பேசுகையில், சாவர்க்கர் துணிச்சலுக்கும், நாட்டின் மீது அசையாத அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக இருந்தார் என்றும், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்றும், […]
சென்னை: பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று, இன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக 8 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பாஜக சிறுபான்மையினருக்கு […]
சென்னை: மின் சேவைகள் பற்றியும் அறியவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதள முகவரியை TANGEDCO அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தலைமையின் கீழ் tangedco.org எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மின்சார வாரியம் தொடர்பான செய்திகள், மத்திய மாநில அரசுகளின் மின் திட்டங்கள், இணைப்பு பெற விண்ணப்பங்கள் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த tangedco.org இணையத்தளமானது பல்வேறு சேவைகளை வழங்குவதால் அதில் ஒரு லிங்கை கிளிக் செய்தால் அது இன்னொரு லிங்கை திறக்கும் […]
சென்னை: 5ஆம் கட்ட வாக்குபதிவில் 9 மணி வரையில் 10.28 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 தொகுதிகளுக்குமான தேர்தல் 4 கட்டங்களில் நிறைவுபெற்ற நிலையில் இன்று (மே 20) 5ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசம்(14), பீகார்(5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட்(3), லடாக்(1), மகாராஷ்டிரா(13),ஒடிசா (5), மேற்கு வங்கம் (7) ஆகிய மாநிலங்களில் 49 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே […]