சென்னை: தமிழகத்தில் தெருநாய் கடி சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் தெருநாய் கடித்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கொரவினாஹலா கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார். 15 தினங்களுக்கு முன், லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்திருக்கின்றன. இதனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அது பலனளிக்காமல் […]
சென்னை: கடவுளின் வேலையை செய்ய என்னை அவர் பூமிக்கு அனுப்பியுள்ளார் என பிரதமர் மோடி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. மொத்தமுள்ள 7 கட்ட தேர்தலில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதம் 2 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேரடி மேடை பிரச்சாரத்துடன் தொலைக்காட்சி நேர்காணல் மூலமும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி […]
சென்னை : ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளைஞன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்ய உயரத்தில் இருந்து ஆழமான நீரில் குதித்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தௌசிப் என்ற 18 வயது இளைஞர் 100 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட […]
சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரலை பாதிக்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் உலகபெருந்தொற்று நோயாக உருமாறி பல்வேறு பரிமாணங்களில் பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்த கொரோனா தொற்றை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சி சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தனர். இருந்தும் தற்போது கூட புதியவகை கொரோனா வைரஸான KP.2 எனும் தொற்று கண்டறியப்பட்டு சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் நிலை உருவாகியுள்ளது. இது […]
சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார். பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக […]
சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய […]
சென்னை : தமிழக மின்சார வாரியம் தற்போது தமிழ்நாடு மின் நுகர்வோருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு இனி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. மேலும், இது 500 யூனிட் அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இப்படி வாட்ஸ் அப் செயலி […]
சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். கடந்த மே 20-ஆம் தேதி ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்திய […]
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப […]
சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SQ321) ஒன்று நடுவானில் அதிக மேகம் கொண்ட கூட்டத்தில் திடீரென மோதியதால் பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், மோசமான […]
சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். இன்று ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு தம்பதி இரு சக்கர வாகனத்தில் மருத்துவ சோதனைக்காக வந்தபோது துயரமான சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவ சோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் கிளம்பும் போது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு இருந்த மரம் ஒன்று திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில், கணவர் ரவீந்திரா மரம் மேலே விழுந்ததில் பரிதாபமாக […]
சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. அதில் பேசிய பிரதமர் மோடி” நம்மளுடைய வீட்டு சாவி காணாமல் போய்விட்டது என்றால் நாம் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், 6 ஆண்டுகளாக ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி […]
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆம்,இது குறித்து யூடியூபர் […]
சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியகியுள்ளது. அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்காலிக அதிபராக முகமது முக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், முதல் துணை ஜனாதிபதி பதவி […]
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 […]
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக பேர் உயிரிழப்பு பேரிடர் மேலாண்மைத்துறை தகவலை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். கனமழை இருப்பதன் […]
சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலாவை சாப்பிட்ட 12 வயது சிறுமியின் வயிற்றுக்குள் ஓட்டை ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரின் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது, கடந்த மாதம், திருமண விழா ஒன்றில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்டதால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு […]
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை […]
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக […]
சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா […]