சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதாக எழுந்த புகாரின் பெயரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவது குறித்து விசாரணை நடைபெற்றது. தென்மண்டல […]
சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து […]
இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது என் தந்தை ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நான் செய்தேன் என ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரையில், […]
கபோசு : மீம்ஸ்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயையும் முக்கிய இடத்தில் இருக்கும் என்றே கூறலாம். இந்த நாய் கொடுக்கும் ரியாக்ஸன் மனிதர்கள் போலவே காமெடியாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் பிரபலமானது. பலரும் இதனை மீம்ஸ்களின் ராஜா என்று கூட கூறுவார்கள். அந்த அளவுக்கு பல வகை ரியாக்சன் கொடுத்து நம்மளை மீம்ஸ் மூலம் சிரிக்க […]
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு மற்றும் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து […]
மெக்சிகோ: ஆண்களின் விதைப்பையில் சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது என்றும் இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு என்பது நமது சுற்றுசூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு என்று கூறினாலும் பிளாஸ்டிக் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குறிப்பிட்ட சில ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் வாயிலாகவோ, சுவாச குழாய் வாயிலாகவோ சிறிய அளவில் மைக்ரோ துகள்களாக மனித உடலில் கலந்துள்ளது […]
ராஜஸ்தான் : வேகமாக மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்து ரோமன்ஸ் செய்துகொண்டு சென்ற காதல் ஜோடியை காவல்துறை கைது செய்தது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோ வைரலாவது வழக்கம். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி ஒன்றும் அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அவர்கள் இருவரும், பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில், ஜோடி […]
டெல்லி: தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற வழக்கு இன்று கோடைகால சிறப்பு அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 […]
சென்னை: காவலாளியை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரையில் சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார். இதற்கிடையில், ராஜேஷ் தாஸ் மனைவியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா […]
சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால், இங்கு எப்போது வெள்ளம் வருவது என சொல்ல முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த காரணமாக, கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், […]
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) – நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் (STF) நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் (STF), நக்சலைட்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்றால் என்ன எதற்காக இந்த விசா கொடுக்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா என்றால் என்ன? ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள் பலருக்கும் UAE (Golden Visa) கோல்டன் விசா வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். பலருக்கும் இந்த விசா எதற்காக வழங்கப்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். முதலில் கோல்டன் விசா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். கோல்டன் விசா […]
சென்னை: ஸ்பெயின் பலேரிக் தீவில் நேற்று நள்ளிரவு உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பலேரிக் தீவு பகுதியில் பால்மா டி மல்லோர்கா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 2 மாடி ஹோட்டல் கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து செய்தி அறிந்த உடன், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கட்டிட […]
சென்னை : ஹரியானாவில் லாரி மீது மினி பேருந்து மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் (மே 24) வெள்ளிக்கிழமை அதிகாலையில் நின்று கொண்டு இருந்த லாரி ஒன்று மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மினி பேருந்தில் பக்தர்கள் […]
சென்னை: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. இந்திய அளவில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனமான கூகுள், பிக்சல் ஸ்மாட்போன் உற்பத்தியை ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட […]
சென்னை: மகாராஷ்டிரா, தானே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தானேவில் டோம்பிவாலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அடுத்தடுத்து பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா […]
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நான் தாக்கப்பட்டது உண்மை என்றும், அப்போது யாரும் எனக்காக உதவ முன்வரவில்லை என்றும் ஸ்வாதி மலிவால் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். டெல்லி முன்னாள் மாநில மகளிர் ஆணைய தலைவியும், ஆம் ஆத்மி கட்சி ராஜ்ய சபா எம்.பியுமான ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டார் என டெல்லி காவல்துறையில் புகார் பதியப்பட்டு விசாரணை […]
சென்னை: ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் […]
சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக திரும்பி வந்து சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என தேவகவுடா எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சர்வதேச அளவில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி […]
சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டிய நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவர் ஒரு டிரக்கர்ஸ் யூனியனின் தலைவராக உள்ளார். இவர் ஹெல்மெட்டுடன் கார் ஓட்டிச் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஏன் என்று பார்க்கையில், இவர் ஹெல்மெட் அணியாமல் ஆடி காரை ஓட்டியதால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது […]