ராஜ்கோட் : குஜராத் ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை 28- உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நானா-மாவா சாலையில் விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் மே 25-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை இந்த விளையாட்டு மையத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் விளையாடி கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென […]
ரஃபா : இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலரின் கைகளில் இருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதங்கள் ஏந்திய அமைப்புகள் செயலாற்றி வருகிறது. அந்த அமைப்புகளில் ஒன்று தான் ஹமாஸ் அமைப்பு. கடந்த ஆண்டில் இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் 200 நாட்களுக்கும் மேலாக காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது கொடூர […]
ஆந்திரா : திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய இரு இடங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் எம்.கொங்கரவாரிப்பள்ளி என்ற இடத்தில், பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய […]
டெல்லி: ஜூன் 1இல் நிறைவடைய உள்ள இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை. […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என 2 மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அலர்ட்டான போலீசார் இன்று அதிகாலை விமான நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு […]
ரெமல் புயல் : மணிக்கு 135 கிமீ வேகத்தில் ரெமல் புயல் கரையைக் கடந்த காரணத்தால் மேற்கு வங்காளத்தில் மரங்களை வேரோடு சாய்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மே 23-ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மே 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு, இது வடகிழக்கு திசையில் […]
அமெரிக்கா: 400,000 டாலர் கடன் தொகையை திருப்பி கேட்டுவிட கூடாது என்பற்காக அமெரிக்க ஊழியர் தனது முதலாளியை 2020இல் தலையை வெட்டி கொலை செய்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட டைரஸ் ஹாஸ்பில் எனும் இளைஞர், 33 வயதான அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஃபாஹிம் சலேவிடம் 2020 ஜனவரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். சலேயின் நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களை கையாண்ட பெர்சனல் உதவியாளராக டைரஸ் ஹாஸ்பில் செயல்பட்டு வந்துள்ளார். ஆரம்பம் முதலே பல்வேறு நிதி […]
சென்னை: கடந்த சில தினங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் காவலர் ஒருவர் சீருடையுடன் ஏறினார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். காவலர் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க […]
சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலை ஆகும். துர்க் மற்றும் ராய்ப்பூர் மாவட்டங்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தன. விபத்தின் போது, இந்த தொழிற்சாலையில் […]
மேற்கு வங்கம்: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர் பதித்த குறிப்புத்தாள் கட்டப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தனர். அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது . நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு […]
அதிமுக: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு தனது கண்டனங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஓர் இந்துத்துவா தலைவர் என கூறினார். மேலும், 2014 தேர்தல் சமயத்தில் பாஜகவா , ஜெயலலிதாவா என்று பார்த்தல் இந்துக்களின் தேர்வு ஜெயலலிதாவாக இருந்தார் என்றும், அவர் தன்னுடைய […]
அண்ணாமலை: உடுப்பியில் எஸ்.பியாக பொறுப்பேற்ற போது தனது கட்டுப்பாடிற்குள் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் ஈடுப்பட்ட வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பின்னர் தற்போது முதன் முறையாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அரசியல் களம் தாண்டி தனது காவல்துறை பணி அனுபவங்களையும் […]
ரஃபா: காசாவின் ரஃபா நகரில் நடைபெற்று வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஆதரிக்கும் நீதிமன்றம், ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பிரிட்டோரியா நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த […]
ஹைதராபாத் : கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். ஹைதராபாத் மாநிலத்தில் எல்.பி.நகர்-நாகோல் சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சாலையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் மதுகுடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருந்தனர். இதனை அந்த சாலையில், நடைப்பயிற்சி வந்தவர்கள் பார்த்ததும் பொது இடத்தில் என் இது போன்று செய்கிறீர்கள் என்று கேட்டனர். உடனடியாக அந்த பெண் அப்படி சொன்னவர்களிடம் வாக்கு […]
மேற்கு வங்கம்: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில் அவரது உடல் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசம் அவாமி லீக் கட்சி எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு […]
குரூப் 2 : டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் மாதம் நடத்தும் குரூப் 2, 2A தேர்வின் புதிய பாடத்திட்டம் தற்போது அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு துறையில் டிகிரி அளவிலான பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வாயிலாகவும் அந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு தேதிகளை கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி TNPSC வெளியிட்டது. வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2030 […]
டெல்லி : 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 9 மணி வரையில் 10.82% சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் டெல்லி, ஹரியானா உட்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தலில் 9 மணி […]
ரெமல் புயல் : வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் வரும் 26-ஆம் தேதி வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த மே 23-ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. அதன் தன்பின் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காலை 08:30 […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு […]
பிக்மி : கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பிக்மி (PICME) என்றால் என்ன? பிக்மி நம்பர் என்றால் என்ன? இந்த நம்பரை எப்படி பெறுவது? இதனால் என்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க… அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் “PICME” ஆகும். கர்ப்ப கால பரிசோதனைக்காக தனியார் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அணைத்து பெண்களும் இந்த PICME இணையதளத்தில் […]