டெல்லி: 24 வருடமாக என்னை விமர்சித்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துவிட்டனர். தற்போது அவர்கள் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். – பிரதமர் மோடி. நாளையுடன் (மே 29) நாடாளுமன்ற இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தினை பல்வேறு வகையாக மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் வாயிலாக தனது பிரச்சார கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அண்மையில் ANI செய்திநிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி […]
ஹரியானா : ஒரு கொடூர தாய் தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் தாயின் வீடியோ பார்ப்பதற்கே பதற்றமடைய செய்கிறது. இந்த வீடியோவை சிறுவனின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த தாய் தனது சொந்த மகனின் மேலே அமர்ந்து கொண்டு மாறி மாறி அடிப்பதும், வார்த்தைகளால் திட்டுவதும் தெளிவாக […]
மதுரை: ஜெயலலிதாவை பற்றி கூறி பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் தலைவர்களின் பெருமைகளை கூறி மக்களிடம் ஆதரவு பெறுங்கள் – ஆர்.பி.உதயகுமார். சில தினங்கள் முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் பற்றி தனியார் செய்தி சேனல் நேர்காணலில் , ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு […]
ஆனந்த் அம்பானி : உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய திருமண விழா, ஒரு சொகுசு கப்பலில் நாளை முதல் தொடங்குகிறது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இந்த வாரம் ஐரோப்பாவில் தங்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வை நான்கு நாள் கொண்டாட திட்டமிட்டுள்னர். ஒரு பிரம்மாண்ட கப்பலில் இத்தாலியில் தொடக்கி பிரான்ஸ் வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் கொண்டாட்டத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் […]
டெல்லி: ஜூன் 1 வரையில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு 6மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 2 சிறுவர்கள் , ஒரு தையல் கடைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை […]
புனே: VD சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் உண்மைத்தன்மை இருப்பதாக புனே போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 மார்ச் மாதம் லண்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில், இந்துத்துவா தலைவர் V.D.சாவர்க்கர் பற்றி பேசினார். அதில், சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில் என குறிப்பிட்டு, சாவர்க்கரின் நண்பர்கள் ஒரு இஸ்லாமியரை தாக்குவதாகவும், அதனை சாவர்க்கர் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்ப்பதாவும் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டு […]
கன்னியாகுமரி: இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 30, 31, ஜூன் 1ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைய உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (மே 29) நிறைவடைய உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி தேர்தல் பிரச்சரமும் இதில் அடங்கும். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக […]
பிரதமர் மோடி: தேர்தல் விதிமுறைகள் பற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கு மிக பெரிய மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக , மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தல் விதிமுறைகளை மீறி கடுமையாக விமர்சித்து பிரச்சாரம்/விளம்பரங்கள் செய்வதாகவும், அதனால் அத்தகைய விளம்பரங்களை வெளியிட தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு […]
நெல்லை: கடந்த வாரம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடைகாலத்தில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவானது. இதனால், விவசாய நிலங்களுக்கு பயிர் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், சபாநாயர் அப்பாவு, பயிர் காப்பீட்டு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விவசாய பகுதிகளில் நெற்பயிர்கள் […]
குரூப் 4: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் இந்த ஆண்டு 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tnpsc.gov.in மற்றும் tnpscexams.inஆகிய இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்கள் நிரந்தர […]
பஞ்சாப்: வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிறு) பஞ்சாப், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்ய […]
கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு சென்றதாக கூறப்பட்ட மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, தான் நிரபராதி என்றும் 31ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதாகவும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஹாசன் தொகுதி ம.ஜ.த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்கள் மற்றும் இன்னும் சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில், அவர் தனது எம்பி பதவிக்கான டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது. இந்த […]
டெல்லி: தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட (7ஆம் கட்ட) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து இன்னும் 9 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் , தேர்தல் […]
தெலுங்கானா : நகர்கர்னூல், விகாராபாத், காமரெட்டி மற்றும் யாதாத்ரி-புவனகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்றைய தினம் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதில், தனித்தனி இடங்களில் 14 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நாகர்கர்னூல் மாவட்டம் தண்டூரில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பால் பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் […]
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார். சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் […]
பப்புவா : பயங்கரமான நிலச்சரிவு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டுள்ளனர். கடந்த மே 24-ஆம் தேதி பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம், தேசிய மீட்புக் குழுவினற்கு […]
அமெரிக்கா : தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பல மாநிலங்களை சூறாவளி மற்றும் பிற தீவிர புயல்கள் தாக்கியதில் மத்திய அமெரிக்காவில் 15 பேர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீச தொடங்கிய சூறாவளி வீசியதன் காரணமாக, அமெரிக்காவின் பல தென் மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட டல்லாஸ் நகரத்திற்கு வடக்கே டெக்சாஸின் டென்டன் கவுண்டியில் உள்ள […]
சென்னை: மதிமுக தலைவர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார். சகோதரர் வீட்டில் தங்கி இருந்த வைகோ இரவில் வீட்டிற்குள் தவறி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்து இருந்தார். மேலும், உடனடியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 உயர் அதிகாரமிக்க நபர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் […]