ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ஜம்மு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஒரு 150 பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை டாங்லி மோர் அருகே சோகி சோராவில் நடந்ததுள்ளது. பேருந்து 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, […]
மக்களவை தேர்தல் : இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. ஜூன் 1ம் தேதி 7 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஒவ்வொரு […]
ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் ANI செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 5 முறை தொடர்ந்து முதலைவராக பொறுப்பில் இருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிககளுக்கான என இரு தேர்தலும் ஒரே […]
டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் […]
காங்கிரஸ்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க 48 மணிநேரம் கூட ஆகாது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (ஜூன் 1) உடன் தேர்தல் நிறைவடைய உள்ளது. இதில், NDA கூட்டணியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என கூட்ட்டணிக்குள் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து இன்று PTI செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் […]
டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது […]
டெல்லி : ஜூன் 1ம் தேதி ஆதார் கார்டு புதுப்பித்தலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் என அவற்றின் விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்திலும், அரசு துறைகளுக்கான விதிகள் மாறும், சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வருகின்ற ஜூன் மாதம், சில முக்கிய சேவைகள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் ஓட்டுநர் உரிமம், கேஸ் சிலிண்டர்களின் விலையும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் […]
தேர்தல் விதிமுறைகள்: இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு வாக்குப்பதிவு சமயத்தில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வானது தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். இன்று மாலை 5.30 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் வரையில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் தியான நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. […]
சாலை விதிகள்: சாலை விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைக்கவும் பல்வேறு புதிய திருத்தங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கவும், வாகன பயன்பட்டால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கவும் அவ்வப்போது மத்திய போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும். அதனை மாநில அரசுகள் அனுமதி பெற்று அந்தந்த மாநிலங்களில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்படும். அப்படியாக, மத்திய போக்குவரத்து அமைச்சகம் வரும் […]
மகாத்மா காந்தி: 1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரையில் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை – பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாத்மா காந்தி பற்றியும், அவரை இந்திய தலைவர்கள் உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டனர் என்றும் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறுகையில், மகாத்மா காந்தி ஒரு சிறந்த மனிதர், சுதந்திரத்திற்கு பிந்தைய கடந்த 75 […]
ஒடிசா: ‘ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக்கின் உடல் மோசமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும்.’ – பிரதமர் மோடி. 147 சட்டமன்ற தொகுதிகளையும், 21 மக்களவை தொகுதிகளையும் கொண்ட ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மே 13ஆம் தேதி (4ஆம் கட்ட தேர்தல்) தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது. வரும் ஜூன் 1ஆம் தேதியன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளன்று, ஒடிசாவில் 48 சட்டமன்ற […]
பாகிஸ்தான் : அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 28 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, வாசுக் நகரில் திடீரென பேருந்து […]
பெங்களூரு: ஆபாச வீடீயோக்கள் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நாளை நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூரு விமான நிலையம் வரவுள்ளார் என PTI செய்தி குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்பியும், மஜத கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உட்பட சிலர் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா […]
வைகோ: மதிமுக நிறுவனர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவரது மகன் துரை வைகோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) மதிமுக நிறுவனர் வைகோ நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை அப்பாலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]
மத்திய பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் தலைநகரில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள போடல் கச்சார் எனும் கிராமத்தில், நேற்று (செவ்வாய்) இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக மஹுல்ஜிரி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என PTI […]
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால […]
ரஜினிகாந்த் : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். பின்னர், ஓய்வை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பிய அவர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து […]
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை […]
மத்திய பிரதேசம்: தலித் பெண் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் சாகர் பகுதியில் தலித் பெண்ணை விக்ரம் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த வழக்கில் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என விக்ரம் சிங் கும்பல் , பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தாரை அடித்து […]
நடிகர் விஜய் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. உலக பட்டினி தினமாகக் கருதப்படும் (மே 28ம் தேதி) இன்று நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் […]