உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்களும் தற்பொழுது ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப விரும்புவதாக உணர்வுபூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினி அவர்களின் நலன் குறித்து கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கை தகவல் கேட்டு நிம்மதியை மீட்டெடுத்தேன். உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா, வாழ்த்துகிறேன் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில்,…
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள்…