பச்சை மிளகாயின் பசுமையான நன்மைகள்…!!!
பச்சை மிளகாய் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை நாம் அனைவரும் சமையலில் தான் பயன்படுத்துகிறோம். இது காரமாக இருப்பதால் நாம் உண்பதில்லை. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பச்சை மிளகாயிலும் உள்ளது. அவற்றை பற்றி நாம் காண்போம்.
பச்சை மிளகாய் கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. வேகமாக செரிமானம் ஆகும். நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. ஆண்டி பாக்டீரியா இருப்பதால் தொற்றுநோய் வராமல் தடுக்கிறது. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.