சூர்யாவுக்காக எழுதிய கதையில் நடிக்க உள்ளாரா ஆர்யா?! பா.ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் பா.ரஞ்சித், கபாலி படத்தை முடித்ததும், சூர்யாவிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கியிருந்தார். ஆனால் அதற்குள் மீண்டும் ரஜினியுடன் காலா படம் மூலம் இணைய வாய்ப்பு கிடைத்ததும் அப்படத்தை இயக்க கிளம்பிவிட்டதால் சூர்யா படம் எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் எனவும், அதில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த படத்தில் ஆர்யா வடசென்னையை சேர்ந்த குத்துசண்டை வீரராக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு தகவலாக இப்படம்தான் பா.ரஞ்சித், சூர்யாவிடம் கூறிய கதையாம். அதனை ஆர்யாவிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம். என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025