நான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என ‘பி’ பரிசோதனையில் நிரூபிப்பேன்!
தங்க மங்கை கோமதி மாரிமுத்து தேகாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், இவர் போட்டிக்கு முன்பு, ஊக்கமருந்து அருந்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தன் மீதான குற்றத்தை மறுத்து வருகிற நிலையில், தற்போது இவர் ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை என நிரூபிப்பதற்காக, பரிசோதனை மேற்கொள்வதற்காக கத்தார் சென்றுள்ளார்.
இந்நிலையில், கோமதி மாரிமுத்து, வாட்சப் மூலம் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், நான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என இந்த சோதனை மூலம் தெரிய வரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.