கொரோனா தடுப்பு மருந்து- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் “அஸ்ட்ராஜெனெகா” மருந்து ஆரம்பகட்ட சோதனை முடிவா??
சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், உலகளவில் இதுவரை 13,714,771 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,87,231 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பங்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியான “அஸ்ட்ராஜெனெகா” மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துக்காக சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த தடுப்பூசிகளுக்கான முதல் கட்ட சோதனை முடிவுகளுக்கான நேர்மறையான தகவல்கள் இன்று வெளியாகும் என ஐடிவி ஊடகத்தின் அரசியல் ஆசிரியர் ராபர்ட் பெஸ்டன் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிராக அஸ்ட்ராஜெனெகா எனும் தடுப்பூசி, மனிதர்கள் மீது சோதனை செய்ய உள்ளது. ஆனால் அதன் முதல் கட்ட முடிவுகளே வெளியாகவில்லை எனவும், முதல் கட்ட பரிசோதனையில் இது பாதுகாப்பானதா? மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறதா? இல்லையா? என்பதை காண்பிக்குமாறும் தெரிவித்தார்.
தடுப்பூசியை உருவாக்குபவர்கள், இந்த மாதத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தப்பட்டதாகவும், ஜூலை மாத இறுதிக்குள் முதல் கட்ட முடிவுகளை “தி லான்செட் மருத்துவ இதழில்” வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“தடுப்பூசி முடிவுகலின் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் குறித்த விஞ்ஞான இதழிலிருந்து உறுதிப்படுத்தலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அது எப்போது வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்க, உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பரிசோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.