ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரியது!
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் மகளிர் தின வாழ்த்துக்கள் என்ற எழுத்தை படிக்கட்டிலிருந்து பெண் துப்புரவாளர் அகற்றிய புகைப்படம் வெளியானதையடுத்து மன்னிப்பு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கிளாரன்டன் கட்டிட படிக்கட்டில் ‘ஹேப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அதை அங்கிருந்த பாதுகாவலர்கள் பெண் துப்புரவாளரை அழைத்து துடைத்து அழிக்கச் சொன்ன போது எடுத்த படம் எனக் கூறி ஃசோபி ஸ்மித் என்ற பேராசிரியர் தமது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என்ற பாணியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இச்செயலுக்கு டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.