ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் துவக்கம்!
பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் சோதனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் தொடங்கியது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து, மனிதர்கள் மீது சோதனை நடத்திவந்தனர்.
ஆனால் சில தினங்களுக்கு முன்னதாக, அந்த மருந்தை செலுத்திய தன்னார்வலர் ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தினால், தடுப்பூசியின் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள “ஆஸ்ட்ராஜெனாகா” என்ற கொரோனா தடுப்பூசியின் பரிசோதனைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மருந்தின் பரிசோதனை மீண்டும் தொடங்கவுள்ளது.