மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் பாடல் வெளிநாடுகளிலும் டிரெண்டாகி வருகிறது இதற்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் நடனம் செய்துள்ளார்கள்.
தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகளவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் உள்ள ஒரு சிலர் பொது இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டே வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடுகின்றனர். அந்த வீடியோவை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…