உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. அந்த வகையில், இந்த கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
அமெரிக்காவில், இதுவரை, 1,793,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 104,542 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், ‘ உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம்.’ என அதிரடியாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல லட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. இந்த விஷயத்தில், சீனாவும், அமெரிக்காவும் இணைந்து நாடகமாடுகிறது. சீனாவின், வுஹன் மாகாணத்தில் வைரஸ் பரவல் குறித்து, சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது என்றும், சீனாவின் தவறால், உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம் என்றும், ஆனால், உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உலக சுகாதார மையத்திற்கு, நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம். ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கை எதையும் சீனாவோ, உலக சுகாதார மையமோ கேட்கவில்லை என்றும், உலக சுகாதார மையம் , கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை மறைத்துவிட்டது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம் என்றும், உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளின், சுகாதார தேவைக்காக பயன்படுத்த போகிறோம்.’என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…