கடந்த 2 மாதத்தில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு.! தொடரும் மர்மம்.!
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதத்தில் 169 யானைகள் உயிழந்தன. அந்த அதிர்ச்சியான செய்தி மறைவதற்குள், ஜூன் மாதத்தில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
இதுவரை, 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது, இது வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த யானைகள் அனைத்தும் நோயால் உயிரிழந்ததா..? அல்லது விஷம் வைத்து யாராவது கொலை செய்தார்களா..? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால், உயிரிழந்த யானைகள் நீர்நிலைகளுக்கருகே இறப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த யானைகளின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவியலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், கொரோனா காரணமாக உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.