ஹாங்காங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்ற வாக்களிப்பில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ‘ ஒரே நாடு இரண்டு முறை’ என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது. கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என புது சட்டத்தை ஹாங்காங் நகர் மீது புகுத்தியது. இதனை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. சீனா தனது அதிகார பலத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உலக நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் அமல்படுத்தியது.
அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்பவர்,மேலும் சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்பவர், மட்டுமின்றி கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய வழி வகை செய்வதாகவும் இத்துடன், சீனாவுக்கு நாடு கடத்த இச்சட்டத்தில் இட உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவால் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் கடும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணமே உள்ளது.இதற்கு இடையில் தான் செப்டம்பர் மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை களமிறக்குவதற்கான முயற்சியில் ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு கட்சி ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தேர்தல் நடத்தியது. வாரத்தின் இறுதி நாளில் மட்டும் , நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் கிட்டத்தட்ட 2,30,000 பேர் வாக்களித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…