எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும் – விஷ்ணு விஷால்..!!

விஷ்ணு விஷால் தனது திருமணம் விரைவில் நடக்கும் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன் என்ற திரைப்படம் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
இதில் அவர் பேசியது ” வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும். “பாசிட்டிவ்” ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, சோதனைகளை தாண்டி போக வேண்டும். இதனை எனது அப்பா எனக்கு சொல்லி கொடுத்தார். எனக்கும் ஜூவாலா கட்டாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் என்றும் கூறிஉள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025