மகேஷ் பாபும் மகனும் ஒரு போட்டியில் இறங்குகின்றனர். ஆம் இருவருள் யார் உயரம் என்று கேட்க 13வயதான கௌதம் அப்பாவிடம் நீங்கள் தான் உயரம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார்.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக தனது மகள் சித்ரா மற்றும் மகனான கௌதம் உடன் இணைந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது மகனும், அப்பாவும் ஒரு போட்டியில் இறங்குகின்றனர். ஆம் இருவருள் யார் உயரம் என்று கேட்க, 13வயதான கௌதம் அப்பாவிடம் நீங்கள் தான் உயரம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார். இந்த வீடியோவிற்கு பலர் கௌதமிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் 13வயதால் அப்பாவை போன்று உயரத்தில் இருக்கிறான் கௌதம்.
ஆனால் இந்த வயதில் நீங்கள் அவரை விட குறைந்த உயரத்தில் தான் இருந்திருப்பீர்கள் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாரும் இந்த அழகான சண்டை வீடியோ வுடன் தனது மகன் தான் உயரம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…